போராட்ட காலங்களில் முன்னாள் போராளிகள் தேசிய தலைவரின் வழிகாட்டலில் மத்தியில் மதிப்பளிக்கப்பட்டனர்

போராட்ட காலங்களில் முன்னாள் போராளிகள் தேசிய தலைவரின் வழிகாட்டலில் மத்தியில் மதிப்பளிக்கப்பட்டனர் என்கின்றார் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா
(டினேஸ்)
முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் தொடர்பாக மாவட்ட மட்டமாக கட்சி சார்பாக நடைபெற்றுவரும் மக்கள் சந்திப்பு இன்று 28 ஆம் திகதி புதுக்குடியிருப்பு வேணாவிலில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்றது. இங்கு கலந்துகொண்டிருந்த முன்னாள் போராளிகள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்
இது தொடர்பாக மேலும் கூறுகையில் 
யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் ஆகிய நிலையில் முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பத்தினரின் வாழ்வாதாரங்கள் மிக மோசமாக உள்ளது முன்னாள் போராளிகள் பிச்சை எடுக்கும் நிலையில் தற்பொழுது உள்ளனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் சரணடைந்த போராளிகள் தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்படுகின்றனர் ஆனால் அவர்களது வாழ்வாதாரம் ஒரு கேள்விக்குறியாகவே அமைகின்றது இந்த அரசாங்கம் அவர்களது வாழ்வியலை கவனத்தில் கொண்டு புனர்வாழ்விற்கு பின்னர் சுயதொழில் முயற்சிகளுக்காக வழிவகைகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
போராட்ட காலங்களில் முன்னாள் போராளிகள் தேசிய தலைவரின் வழிகாட்டலில் மத்தியில் மதிப்பளிக்கப்பட்டனர் அவ்வாறான காலங்களில் முன்னாள் போராளிகள் மாவீரர்களின் குடும்பத்தினர் மதிப்பளித்தல் என பிரிவுகள் அமைக்கப்பட்டிருந்தது அப்பிரிவுகளின் மூலமாக வாழ்வாதார உதவிகள் தொழில்வாய்ப்புக்கள் என தேசிய தலைவரின் வழிகாட்டலில் வழங்கி வைக்கப்பட்டன அந்தவகையில் தற்பொழுது எமது கட்சி ரீதியாகவுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட போராளிகளின் ஒன்றியத்தின் சார்பில் தமிழ் அமைக்களின் உதவியுடன் வாழ்வாதாரம் தொடர்பான செயற்திட்டங்கள் வரையப்பட்டு அதன் மூலமாக கிடைக்கப்படும் ஆதரவின் பிரகாரம் நடைமுறைப்படுத்த சில வழிவகைகளை முன்னெடுத்துள்ளோம்.
அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்ட நாம் தற்போது ஜனநாயக ரீதியில் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக அரசியலில் முகம் கொடுக்கின்றோம் எமக்கென்று அரசியலில் ஒரு பிரதிநிதி அமைந்திருக்க வேண்டும் காரணம் எமது முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் பிரச்சனைகள் தொடர்பாக தற்போது உள்ள எந்த அரசியல்வாதிகளும் அக்கறை செலுத்துவதில்லை ஆகையினால் நாம் முன்வந்து தேர்தலில் போட்டியிட்டு ஒரு மக்கள் பிரதிநிதியாக கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட வேண்டும்.
அந்தவகையில் தற்போது எமது கட்சியில் புதிய நிறுவாக சபை தெரிவு செய்யப்பட்டுவருகின்றது வட கிழக்கு மாகாணங்கள் உள்ள மாவட்டங்களில் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டு எமது கொள்கைகள் அரசியல் பிரவேசங்கள் தொடர்பாக கலந்துரையாடி வருகின்றோம் அதனடிப்படையில் இன்று இச்சந்தர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எதிர்வரும் ஞாயிறு தினங்களில் வட மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களில் எமது கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருகின்றோம் என இவ்விடத்தில் கூறுக்கொள்ளவிரும்புகின்றேன் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்மக்கள் சந்திப்பின் போது கட்சியின் வட மாகாண ஒருங்கிணைப்பாளர் எம்.அன்புராஜ், ஒன்றியத்தின் செயலாளர் எஸ். சுப்பிரமணியம் முன்னாள் போராளிகள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts