(சுமன்)
ஒரு நாட்டில் வறுமை, கொலைகள், கொள்ளைகள் என்பன இடம்பெறுவதற்குக் காரணம் அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் விடுகின்ற பிழைகளே. நல்லாட்சி அரசாங்கம் இருக்கும் போது இவ்வாறான பிரச்சனைகள் இந்த நாட்டு மக்களுக்கு வரவில்லை என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் த.இன்பராசா தெரிவித்தார்.
தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களாகிய நாம் காலாகாலமாக ஏமாற்றப்பட்டே வந்தருக்கின்றோம். எமது நாட்டின் ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் பற்றிச் சிந்திப்பதாகவும் இல்லை, எமக்கான தீர்வினைத் தருவாதாகவும் இல்லை. எமது தமிழ் அரசியல்வரிகளும் ஆட்சிகள் மாற மாற அந்த ஆட்சியாளார்களின் பின்னே துணைபோய்க் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நாட்டின் ஜனாதிபதி செயற்படுகின்ற விதத்தைப் பாhத்தால் இந்த நாட்டில் அனைத்து மக்களும் கஸ்டத்திற்குள்ளாக்கப்பட்டிருக் கின்றார்கள். இந்த அரசாங்கத்தினால் விவசாயம் முடக்கப்பட்டு விட்டது. இனிவரும் காலத்தில் 40 வீதமான பெறுபேறுகளையும் விவசாயத்தில் பெற முடியாது. பொருளாதாரத்தில் முதுகெலும்பாகவுள்ள விவசாயத்தைக் கூட தற்போதை ஆட்சியாளர்கள் முடக்கிவிட்டார்கள். இவ்வாறு சென்றால் 2025 காலப்பகுதியில் பெரும் பசி பட்டினி, தற்கொலைக்குச் செல்லும் நிலைக்கு இந்த அரசாங்கம் கொண்டு வருகின்றது.
ஒரு நாட்டில் வறுமை, கொலைகள், கொள்ளைகள் என்பன இடம்பெறுவதற்குக் காரணம் அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் விடுகின்ற பிழைகளே. நல்லாட்சி அரசாங்கம் இருக்கும் போது இவ்வாறான பிரச்சனைகள் இந்த நாட்டு மக்களுக்கு வரவில்லை. பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல், விவசாயத்திலும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த அரசாங்கம் வந்ததன் பின்னர் அனைத்தையும் முடக்கி அனைத்து மக்களையும் வறுமை நிலைக்குத் தள்ளியுள்ளது.
ஒரு நாட்டின் வறுமையும், பொருளாதார வீழ்ச்சியுமே போருக்கு வழிவகுக்கின்றது. அதேபோன்று இந்த நாட்டை மீண்டும் அழிவுப்பாதைக்குத் தள்ளும் செயற்பாட்டிலேயே இந்த அரசாங்கம் ஈடுபடுகின்றது