தம்பலவத்தை பாலத்தினூடாக பாயும் மழை நீர் சிரமப்படும் பயணிகள்

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை இணைக்கும் எல்லைக் கிராமங்களான 15ம் கிராமம் வேப்பையடிக்கும் தம்பலவத்தைக்குமிடையில் வீதியில் காணப்படும் பள்ளமான பாலப் பகுதியில் ஓரிரவு மழைக்கே அதிகளவில் வெள்ள நீர் பாய்ந்து செல்வதனால் பொதுமக்களின் பயணப்பாதை அடிக்கடி தடைப்படுகின்றது.
 
உயரமான வீதியில் இவ்வாறான தாழ்வான பாலம் இருப்பதன் காரணமாக ஓர் இரவில் கடுமையான மழை பெய்தால் வயல்நிலங்களின் வடிச்சல் நீரும் சேர்ந்து அடுத்தநாள் காலைவேளையில் பாலத்தின் மேலாக நீர் பாய்கின்றது. பெரும்பாலும் மண்டூர் பகுதியிலிருந்து கல்முனை நோக்கி பயணிக்கும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் அதே போல மட்டக்களப்பு நோக்கி இவ்வீதியால் பயணிக்கின்ற பயணிகளும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
 
வேலைக்கு செல்லும் பெருமளவான பெண் உத்தியோகத்தர்கள் பாலத்தின் மேலாக நீர் செல்கின்ற போது பயணிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதுடன் மழைகாலங்களில் அச்சத்தின் மத்தியிலே பயணிக்க வேண்டியுள்ளதாகவும் கவலை தெரிவிப்பதோடு, உரிய அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்து இப்பாலத்தை நீர்  பரவாதவாறு திருத்தித் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்

Related posts