(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்ட கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவெட்டுவான் அணைக்கட்டு புனரமைப்பு நிகழ்வு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை (08) இடம்பெறவுள்ளது.
பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேமம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையுடனும், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், இரா சாணக்கியன், நசீர் அஹமட் ஆகியோரது பங்குபற்றுதலுடனும் இவ்வங்குராப்பன நிகழ்வு இடம்பெறவுள்ளது.
மாவெட்டுவான் அணைக்கட்டு புனரமைப்பு ஆரம்ப நிகழ்வில் மாயாவட்ட கிராம பொதுமக்களின் பிரசன்னத்துடன் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.