பட்டதாரி பயிலுனர்களாக நியமனங்கள் வழங்குதலில் வெளிவாரிப் பட்டதாரிகளூம் உள்வாங்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று (25) வியாழக் கிழமை கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பட்டதாரி பயிலுனர்கள் நியமனங்கள் எதிர்வரும் நாட்களில் வழங்கப்படவுள்ளது.
இதில் வெளிவாரி பட்டதாரிகள் உள்ளீர்க்கப்படவில்லை அமைச்சரவையில் அனுமதியைப் பெற்றது போல் 2000 வெளிவாரி பட்டதாரிகளும் இதில் உள்வாங்கப்படல் வேண்டும் .
இது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அவர்களை தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் இருந்தபோதிலும் அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ளார் இன்னும் ஓரிரு நாட்களில் இது தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட செயலாளரை சந்தித்து வெளிவாரி பட்டங்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவுள்ளேன்.
16200 பட்டதாரிகள் இதில் நியமனங்களை பெறவுள்ள நிலையில் மேலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்வாரி வெளிவாரி என தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தினால் உள்வாங்கப்படுவதற்கான ஆயத்தங்களும் நடைபெற்று வருகின்றன.
உள்நாட்டலுவல்கள், கல்வி சுகாதாரம் போன்ற திணைக்களங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்றார்.