பட்டிருப்பு வலயத்தில் முதலாவது ஆரம்பப் பாடசாலைக்கான திறன் வகுப்பறைத் திறப்பு விழாவும்

பட்டிருப்பு வலயத்தில் முதலாவது ஆரம்பப் பாடசாலைக்கான திறன் வகுப்பறைத்திறப்பு விழாவும் ,வருடந்த ஒளிவிழா நிகழ்வும் பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலதில்; புதன்கிழமை அதிபர் க.கமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த திறன் வகுப்பறைக்கான நிதி உதவியினை பெரிய கல்லாறு கனடா ஒன்றியத்தின் மூலமே இவ் உதவி முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

 . இந்நிகழ்வில் பிரதம அததியாக மண்முனை தென் எருவில்பற்றுக் கோட்டக்கல்விப்பணிப்பாளரும் பட்டிருப்பு கல்வி வலய கல்வி அபிவிருத்திக்குரிய பிரதிக்கல்விப்பணிப்பாருமான பு.திவிதரன் அவர்கள் கலந்து கொண்டதுடன் பட்டிருப்புக் கல்வி வலயத்துக்குரிய ஆரம்பப்பிரிவுக்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.தயாளசீலன் அவர்களும் பெரியகல்லாறு ஏனைய பாடசாலை அதிபர்களும் ஆலய நிருவாகிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் பா.ரமேஸ் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துபொண்டனர்.

இந்தத் திறன் அபிவிருத்தி வகுப்பறை மூலம் பல்வேறுபட்ட ஆளுமையான மாணவர்களை உருவாக்கமுடியும் என்பதற்காக கனடா ஒன்றயம் இவ் உதவியினை வழங்கியுள்ளது. இவ் உதவியினை வபழங்கிய கனடா ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு பாடசாலையின் அதிபர் கமலநாதன் பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர் ரமேஸ் ஆகியோர் நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.

 

Related posts