கடந்த வருடம் கல்விப் பொதுத்தாரதர உயர்தரப் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இந்த மாதத்திற்குள் வௌியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்காக இம்முறை 40,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கிடைத்துள்ள விண்ணப்பங்களிலிருந்து 30,000 மாணவர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளாகவும் அவர் கூறியுள்ளார்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வெட்டுப்புள்ளிகளை வௌியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது