பாண்டிருப்பு கடற்கரைவீதி கும்மிருட்டில்.. மக்கள் அவதி!மாநகரசபை உறுப்பினர்கள் மூவரின் கவனத்திற்கு

கல்முனை மாகரசபைக்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரை வீதி மற்றும் சவக்காலை வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள மின்குமிழ்கள் மாதக்கணக்காக ஒளிராமலுள்ளன.
 
பாண்டிருப்பு கடற்கரை வீதியில் இரு ஆலயங்கள் சிறுவர் பூங்கா என்பன அமைந்துள்ளன. இவ்வீதியை மக்கள் போக்குவரத்திற்காக அதிகம் பயன்படுத்துகின்றனர்.மேலும் பாண்டிருப்பு கடற்கரையை இரவு வரை பயன்படுத்துவோர் அதிகம். ஆரோக்யாவிற்கு வருவோரின் தொகையும் அதிகம்.
இந்நிலையில் அப்பகுதியில் வெளிச்சம் இல்லாதது மக்கள் மத்தியில் பெரும் அசௌகரியத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
எனவே இவறறுக்கு வகைகூறவேண்டிய  பாண்டிருப்பில் உள்ள மூன்று மாநகரசபை உறுப்பினர்களும் மின்குமிழ்களை ஒளிரச்செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவர்களில் மாகரசபை உறபுபபினர் திருமதி புவனேஸ்வரி வினாயகமூர்த்தி என்பவரே பல மின்விளக்குகளை ஏலவே பொருத்தியவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts