ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தொடர்பான பிள்ளையானின் வழக்குவிசாரணை பெப்ரவரி 21,22 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது சுயமாக வழங்கப்பட்டதா ?அல்லது இல்லையா என்பது தொடர்பான கட்டளை வாக்குமூல விசாரணை 09 நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 1,2ம் எதிரிகள் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது சுயமாக வழங்கப்பட்டதா அல்லது இல்லையா என்பது தொடர்பான கட்டளை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று(9.1.2018) புதன்கிழமை வழங்கப்படவுள்ளது இந்த வழக்கு விசாரணைக்காக முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) உட்பட 6 சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துவரப்பட்டனர்.
கடந்த 2005 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி நத்தார் நள்ளிரவு ஆதாரனையின்போது மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இக் கொலை தொடர்பாக நடைபெற்ற விசாரணையையடுத்து முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்ப 6 சந்தேநபர்களை கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பூர்வாங்கல் விசாரணைகள் நடைபெற்றன
இதனைத் தொடர்ந்து 6 பேரையும் எதிரிகளாக குறிப்பிட்டு கொலை குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப் பகிர்வு பத்திரமானது மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப்பட்டு இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் 1,2 ஆம் எதிரிகள் 3 ஆம் எதிரியான பிள்ளையானை தொடர்புபடுத்தி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வழங்கிய குற்ற ஓப்புதல் வாக்குமூலமானது அவர்கள் இருவராலும் சுயமாக வழங்கப்படவில்லை என எதிர் தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
இதனை தொடர்ந்து விசாரணை இடம்பெற்று எதிரிகள் தரப்பில் ஜனபதிபதி சட்டத்தரணி அனில் சில்வாவும், வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்கள சிரேஷட அரச சட்டத்தரணி மாதவ தென்னகோனும் தத்தமது சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.
முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகள் குற்ற ஓப்புதல் வாக்குமூலத்தை முன்வைத்ததாக அரச சட்டத்தரணிகள் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகள் வழங்கிய குற்ற ஓப்புதல் வாகுமூலம் சுயமாக வழங்கப்பட்டதா இல்லையா என்பது தொடர்பாக எதிர்வரும் பெப்ரவரி 21,22 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் 1தொடக்கம் 7வரையான மற்றும் 16ஆவது சாட்சியாளர்கள் விசாரணைகள் இடம்பெறவுள்ளதுடன் விசாரணைகளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்காக முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) உட்பட 6 சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துவரப்பட்டனர்.
0778602831