மட்டு. மேயர் – ஒஸ்லோ பிரதி மேயர் சந்திப்பு

மட்டக்களப்ப மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன், நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரின் பிரதி மேயர் கம்ஸி குணரெட்னம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, மட்டக்களப்பு மாநகர சபையில் இன்று (09) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண்களைச் சந்திப்பதற்காகவும் மாநகர சபையின் மேலைத்திட்டங்களை அறிந்து கொள்வதற்காகவுமே மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்ததாக, இச்சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஒஸ்லோ நகரின் பிரதி மேயர் தெரிவித்தார்.

நினைவுச்சின்னம் ஒன்றையும் ஒஸ்லோ நகரின் பிரதி மேயருக்கு மட்டக்களப்பு மாநகர சபை மேயர் வழங்கி வைத்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஏ.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related posts