மட்டக்களப்பு மாநகர சபையினால் சுற்றுப்புற சூழலை சுத்தப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் மட்டக்களப்பு மாநகர ஆணையாளரின் வழிகாட்டலின் கீழ் மாநகர சபையின் ஊழியர்கள் இணைந்து நேற்று முதல் தழ்நிலப்பகுகளில் நீர் தடைப்பட்டு தேங்கி நிக்கின்ற இடங்களையும் வீதியோரங்களையும் சுத்தப்படுத்திவருகின்றனர்.
எதிர்வரும் மாதங்களில் மழை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் வடிகான் மற்று நீர்வழிந்தோடும் பகுதிகளை துரிதமாக துப்பரவுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் மாணிக்கவாசகர் தயாபரன் தெரிவித்தார்.
மாநகர சபை எல்லைக்குட்பட்ட சகல பகுதிகளையும் துரிதமாக சுத்தப்படும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவருவதாகவும் சிறுவர் சினேக பூங்காக்களும் அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றதாக குறிப்பிட்டார்.
சூழலை சுத்தப்படுத்தும் ஒரு அங்கமாக நேற்று மாநகர எல்லைக்குட்பட்ட திராய்மடு சுவிஸ்கிரமத்தில் மாநகர ஊழியர்கள் துப்பரவு பணிகளில் ஈடுபட்டதை அவதானிக்கமுடிந்தது.