வடகிழக்கு ஊடகவியலாளர்களுடன் தென்னிலங்கையில் இருந்து ஒரு உறவுப் பாலமாக தமிழ் ஊடகவியலாளர்களும் இணைந்து செயற்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஊடகப் பிரதானி சமன் வகராட்சி அவர்களின் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நேற்று காலமான சிரேஸ்ட ஊடகவியலாளர் ஊடகப் பிரதானி சமன் வகராட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடகிழக்கு ஊடகவியலாளர்களுடன் தென்னிலங்கையில் இருந்து ஒரு உறவுப் பாலமாக தமிழ் ஊடகவியலாளர்களும் இணைந்து செயற்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஊடகப் பிரதானி சமன் வகராட்சி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு பெரும் துயர் அடைந்துள்ளோம்.
பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வடகிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றிய ஊடகவியலாளர் சமன் வகராட்சி தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்திருந்தார்.
ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த காரணத்திற்காக பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்த அவர் நல்லாட்சி அரசில் லேக்கவுஸ் ஊடக நிறுவனத்தின் பிரதானியாக செயற்பட்டார்.
இவரது இழப்பு இலங்கையின் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும். அன்னாரது இழப்பால் துயரடைந்திருக்கும் அவரது குடும்பத்தினரின் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது ஆத்மா சாந்தியடை மட்டக்கப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் பிரார்த்தனை செய்கிறது.