மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஜோசப்பரராஜசிங்கத்தின் 15வது ஆண்டு நினைவு தினம் நேற்று வெள்ளிக்கிழமை(25)அனுஸ்டிக்கப்
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து இயேசு பாலகன் பிறந்த நத்தார் தினமன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நத்தார் திருப்பலி ஆராதானையின் போது 2005 ஆம் ஆண்டு இனந்தெரியாத நபர்களினால் இவர் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார்.
தமிழத் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்த தலைவர்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்பட்ட இவர், 1934 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பிறந்தார்.
அறுபதுகளில் தமிழரசுக் கட்சி மூலம் அரசியலுக்கு நுழைந்த இவர், தான் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் தனது மனைவியின் பெயரில் (சுகுணம் ஜோசப்) கட்டுரைகளை எழுதிவந்ததுடன், இவர் எழுதிய பல கட்டுரைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்நது.
படுகொலைசெய்யப்பட்ட மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலி முன்னணியின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதிகளா சிவயோகச்செல்வன் சாம்பசிவ குருக்கள்,அருட்தந்தை ஜோசப்மேரி ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராஜா,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட கட்சி உறுப்பினர்கள்,தவிசாளர்கள்,மா
இதன்போது மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு பதினைந்து வருட நினைவினை குறிக்கும் வகையில் 15 ஈகச்சுடர்கள் ஏற்பட்டன.
அதனை தொடர்ந்து மலரஞ்சலி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆத்மசாந்திக்காக மௌன பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து நினைவுப்பேருரை நடைபெற்றது.
இதன்போது புதிய அரசியல் யாப்பும் சிறுபான்மை சமூகமும் என்னும் தலைப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.