சுவீஸ் உதயத்தின் 14 ஆம் ஆண்டு நிறைவு விழா பல்வேறு கலைநிகழ்வுகளுடன் இடம்பெற்றது

உறவுகளுக்கு உதவும் கரங்களுடன்  சுவீஸ் உதயத்தின் 14 ஆம் ஆண்டு நிறைவு விழா   30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு Gemeinschaft Zentrum  Botenanker .25 ,8040 .Zurich எனும் இடத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது .

இவ் விழாவானது சுவீஸ் உதயத்தின் தலைவர் ரி.சுதர்சன் செயலாளர் வி.ஜெயக்குமார் பொருளாளர்க.துரைநாயகம் மற்றும் நிருவாகசபை உறுப்பினர்கள் இளையோர்கள் ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் மற்றும் இன்னும் பலரின் ஆதரவுடன் விழா ஆரம்பிக்கப்பட்டது

அத்தோடு கோயிலூர் செல்வராசாவின் கொத்துரொட்டி நூல் அறிமுகமும் அவரது மட்டக்களப்புப் பிரதேச புகழ்கூறும் இன்னிசை நிகழ்வூம் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் எழுத்தாளர் கலாநிதி கல்லாறு சதீஷ் ,பிரான்ஸில் இருந்து எழுத்தாளர் ஸ்ராலின் ஞானம் அவர்களும்   கலந்து சிறப்பித்தனர்.

இளையராகங்கள் ரஞ்சனின் கரோக்கி இசை மாலை, பரதநாட்டிய அபிநயம் சினிமாப்பாடல் அபிநயம் ,அதிஷ்ரலாபச் சீட்டிலுப்பு, கலைஞர் கௌரவிப்பு,  சிறுவர்களின்போட்டி நிகழ்வுகள் மற்றும் சுவிஸ்உதயத்தின் இளையோரின் நெறியாள்கையில் விநோத நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.

மண்வாசனையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாசார உணவுகளும் பரிமாறப்பட்டது .

இந்த பிரமாண்டமான நிகழ்வுக்கு கலந்துகொண்ட அனைவருக்கும் சுவிஸ் உதயத்தின் நிருவாகக் குழு நன்றிதெரிவித்துள்ளனர்

Related posts