மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தினர் கிழக்குமாகாண ஆளுனரை சந்தித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் தொழில் ரீதியாக ஓடுகின்ற முச்சக்கர வண்டி சாரதிகளின் தரிப்பிடம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் மற்றும் மாநகர முதல்வர் ஆகியோருடன் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாக கிழக்குமாகாண ஆளுநர் எம் எல் எ எம் .ஹிஸ்புல்லாவின் கவணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கலந்துரையாடப்பட்டதாக . மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் எஸ் ஜேசுதாஸ் தெரிவித்தார்.
கிழக்குமாகாண ஆளுனருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவிக்கையில் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் தொழில் ரீதியாக ஓடுகின்ற முச்சக்கர வண்டிகளுக்கான தரிப்பிடங்கள் தொடர்பில் கிழக்குமாகாண ஆளுனரை மட்டக்களப்பு ஆளுனர் அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியதோடு இது தொடர்பான கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளோம் இவற்றை கவனத்தில் கொண்ட ஆளுனர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி சுமுகமான தீர்வினை பெற்று தருவதாக தெரிவிததாக தெரிவித்தார்