விரும்பிய ஆசிரியர்கள்; வெளிமாவட்டத்தில் கடமையாற்றமுடியும் கட்டாயமாகச் சொந்தமாவட்டத்திற்குச் செல்லத்தேவையில்லை-மாகாணக்கல்விப் பணிப்பாளர் உறுதி

கிழக்குமாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய இடம்பெறவுள்ள ஆசிரியர் இடமாற்றத்தில் விரும்பிய ஆசிரியர்கள் மாத்திரமே தங்களது சொந்தமாவட்டத்திற்குச் செல்லமுடியும் ஆசிரியர்களது விருப்பத்திற்கு மாறாக எந்த ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்யப்போவதில்லை என கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் நிஷாம் உறுதியளித்துள்ளதாக தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் க.நல்லதம்பி தெரிவித்தார்.

கிழக்குமாகாணத்தில் இடம்பெறவுள்ள  ஆசிரியர்களுக்கான கட்டாய இடமாற்றம் தொடர்பாக  மாகாணக்கல்விப்பணிப்பாளருடன் தொடர்புகொண்டு பேசியபோது மாகாணக்கல்விப்பணிப்பாளர் உறுதியளித்துள்ளதாக அவர்தெரிவித்தார்.

கிழக்குமாகாணத்தில் ஆளுநரின் உத்தரவின் பேரில் இடம்பெறவுள்ள ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் இடம்பெற்றுவருகிறது அதாவது கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற கல்வி வலயங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களில் வெளிமாவட்டத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு ஒருவிண்ணப்பப்படிவமும் அதே மாவட்டத்தில் கடைமையாற்றும் ஆசிரியர்களுக்கு மற்றுமோர் விண்ணப்பப்படிவமும் வழங்கப்பட்டு இருப்பதுடன்  வெளிமாவட்ட ஆசிரியர்கள் தங்களது சொந்தமாவட்டத்திற்;குக் கட்டாயம் செல்லவேண்டும் என பணிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கிழக்குமாகாணக் கல்விப்பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது கட்டாயம் என்பது பிழையானது விருப்பத்தின் பேரில் செல்லவுள்ள ஆசிரியர்கள் தங்களுக்கான விண்ணப்பத்தில் தாங்கள் விரும்பும் கல்வி வலயத்தைக் குறிப்பிடவேண்டும் என கல்விப்பணிப்பாளர் தெரிவித்ததாக தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு தங்களால் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவம் வெறும் தகவல் சேகரிப்புக்காகவே எனவும் கல்விப்பணிப்பாளர் தெரிவித்ததாக தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

 எனவே வெளி மாவட்டத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் விரும்பினால் மாத்திரம் தங்களது  மாவட்டத்திற்குச் செல்லலாமே தவிர கட்டாயம் செல்லத்தேவையில்லை  எனத்தெரிவித்துள்ளார்.

அதேவேளை வெளி மாவட்டத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தில் அவ் ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டத்திற்குச் செல்லவேண்டுமானால் அவ்மாவட்டத்தில் இருக்கும் மூன்று கல்வி வலயங்களைத் தெரிவுசெய்யவேண்டும் எனக் கெட்கப்பட்டுள்ளதுடன்   அவ் விண்ணப்பப் படிவத்தில் வேறு எதுவும் இல்லை.

 ஆனால் மாகாணக் கல்விப்பணிப்பாளர் தெரிவிக்கின்றார் விருப்பமில்லாத ஆசிரியர்கள் அவ் விண்ணப்பத்தில் விருப்பமில்லை என விண்ணப்பிக்கமுடியும் எனத் தெரிவித்தார். ஆனால் அவ்விண்ணப்பப்படிவத்தில் அவ்வாறாக எவ்வித  தெரிவுகளையும் தெரிவிக்கும் கூற்றைக்காணமுடியவில்லை

  எனவே ஆசிரியர்கள் குழம்பத் தேவையில்லை தங்களது விண்ணப்பப்படிவத்தில் மூன்று கல்வி வலயங்களின் பெயர் குறிப்பிடக் கேட்கப்பட்டுள்ளது

 அதில் நீங்கள் வெளிமாவட்டத்தில் கடமையாற்ற விரும்பினால் விரும்பும் கல்வி வலயத்தைக் குறிப்பிடமுடியும் அதில் நீங்கள் கற்பிக்கும் வலயமாகவும் இருக்கலாம் எனத் தெரிவித்ததாக தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts