மட்டக்களப்பு மேற்கு கல்விவலயம் படுவான்கரை பெருநிலத்தில் அமைப்பதற்கு அடித்தளம் இட்டவர்கள் விடுதலைப்புலிகளே அவர்களின் கோரிக்கையை ஏற்று அதனை செயல்படுத்தியவர்கள் அப்போது தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பா.அரியநேத்திரன்,செல்வி க.தங்கேஷ்வரி ஆகிய இருவரையுமே சாரும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன் தெரிவித்தார்.
அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலய மெய்வல்லுனர் திறனாய்வு இல்ல விளையாட்டு விழா இன்று 03/03/2019, வித்தியாலய அதிபர் சு.தேவராஜன் தலைமையில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் முதன்மை அதிதியா கலந்து கொண்டு மேலும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன் உரையாற்றுகையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உருவாக்கப்பட்ட வரலாறு தெரியாமல் பலர் உண்மையை மறைத்து கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
கடந்த 2004,ம் ஆண்டு தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 22,பேர் தெரிவு செய்யப்பட்ட போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர் அப்போது விடுதலைப்புலிகளின் ஆளுமை வடகிழக்கில் இருந்த காலம் 2005 ம் ஆண்டு மட்டக்களப்பில் இருந்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறையை சேர்ந்தவர்கள் படுவான்கரை பகுதியை உள்ளடக்கிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பணிக்கப்பட்டது அந்த முயற்சியை மத்திய கல்வி அமைச்சு மூலமகாக முன்மொழிவுகள் வழங்கப்பட்டு பலதடைவைகள் அதற்கான அழுத்தங்களை அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பா.அரியநேத்திரன் செல்வி க. தங்கேஷ்வரி ஆகிய இருவரும் கடும் முயற்சி மேற்கொண்டனர்.
இந்த முயற்சிகள் செய்யப்பட்டபோது கிழக்கு மகாணசபை இயங்கவில்லை முதலமைச்சராக எவரும் தெரிவுசெய்யாத காலம் அது அந்த காலத்தில் மத்திய அரசு ஊடாக அதற்கான அனுமதி கிடைத்த போது 2008,ம் ஆண்டு கிழக்குமகாணசபை தேர்தல் இடம்பெற்று முதலமைச்சராக சந்திரகாந்தன் தெரிவானார் அதனை கிழக்குமகாணசபை அங்கீகரித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 64,பாடசாலைகளை உள்ளடக்கி மட்டக்களப்பு மேற்கு வலயம் என்ற பெயரை கிழக்கு மகாணசபையால் அங்கீகரித்தது.
இதுதான் மட்டக்களப்பு மேற்கு கல்விவலய ஆரம்பித்த வரலாறு விடுதலைப்புலிகளால் இவ்வாறு முன்மொழியப்பட்ட தனி கல்வி வயத்தை அதன் உண்மை வரலாறு தெரியாமல் காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையாக வரலாறுகளை புலிகள் இல்லாதபோது மாற்றக்கூடாது.
அம்பிளாந்துறை கிராமத்துக்கு தனி வரலாற்று சிறப்பு உள்ளது பல துறையிலும் முன்மாதிரியான மிகவும் பழைமையான கிராமமாக அம்பிளாந்துறை நிகழ்வதற்கு இந்த பாடசாலை முன்மாதிரியாக திகழ்வதை காணமுடிகிறது.தற்போது இந்த வித்தியாலயம் முதல்தர (1A/B) வித்தியாலயமாக தரம் உயர்திய பெருமை இந்த ஊரை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களின் கடும் முயற்சியால் கடந்த 2012,ம் ஆண்டு ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் ஊடாக உள்வாங்கப்பட்டமையே காரணம் அந்த காலத்தில் ஏற்கனவே மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் மூலமாக அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலயம் ஆயிரம் பாடசாலை திட்டத்தில் சேர்பதற்கான முன்மொழிவுகள் அனுப்பபட்டபொது அதனை கிழக்கு மகாணசபையால் நிராகரிக்கப்பட்டது அதன்பின் மத்திய கல்வி அமைச்சர் ஊடாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஆயிரம் பாடசாலைகள் அமைப்பது தொடர்பான கூட்டத்தில் கிழக்கு மாகாணசபை இந்த பாடசாலையை நிராகரித்தமையை சுட்டிக்காட்டி மீண்டும் அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலயம் உயர்தர பாடசாலையாகவும் தனியான இன்னுமொரு ஊட்டப்படாசாலையும் அம்பிளாந்துறைக்கு கிடைத்த பெருமை பா.அரியநேத்திரன் அவர்களையே சாரும்.
தற்போது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் வலய கல்விப்பணிப்பாளர்களாக பாஷ்கரன்,சத்தியநாதன்,அகிலா கனகசூரியம் ஆகியோர் மிகவும் திறமையாக இந்த வலயத்தின் கல்வி செயல்பாடுகளை முன் எடுத்துள்ளனர் தற்போது புதிய வலய கல்விப்பணிப்பாளராக சி.சிறிதரன் நியமிக்கப்பட்டுள்ளார் இந்த நியமனம் உயர் நீதிமன்ற தீர்ப்பு மூலமாக அவருக்கு கிடைத்த பதவியாகும் அவரும் திறமையாக மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் கல்வி செயல்பாடுகளை முன் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது இராமகிருஷ்ண மிஷனில் இருந்து சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்றவர் மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் தொடர்ச்சியாக கடமைபுரிந்தவர் மட்டக்களப்பு மேற்கு வலய பாடசாலைகளின் வரலாறுகளை நன்கு அறிந்தவர் இப்பகுதி மக்களை பற்றிய அறிந்தவர் இந்த வகையில் மேலும் இந்த கல்விவலயம் உயர்ச்சி பெற உழைப்பார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது அவரின் சேவை திறமையாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு எனவும் மேலும் கூறுனார்.
இந்த விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கோட்டக்கல்வி பணிப்பாளர் ந. தயாசீலன் உட்பட பலரும் உரை யாற்றினர்