மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தரப் பெண்கள் தேசிய பாடசாலையின் ஆரம்பப்பிரிவுக்கான பரிசளிப்புவிழா கல்லூரியின் முதல்வர் திருமதி.கரணிகா சுபாகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை(4.5.2018)காலை 9.00 மணியளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் அவர்களும்,கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மாணிக்கம்-உதயகுமார் அவர்களும்,விஷேட அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களும், மற்றும் கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி.சாமினி ரவிராஜ்,முன்னாள் அதிபர்களான திருமதி.சுபா.சக்கரவர்த்தி,திருமதி.சாந்தினி பவளகாந்தன்,திருமதி.இராஜகுமாரி கனகசிங்கம்,முன்னாள் மண்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.சுகுமாரன்,கல்லடி விவேகானந்தா கல்லூரியின் அதிபர் திருமதி.திலகவதி ஹரிதாஸ்,மெதடிஸ்த மத்திய கல்லூரியின் உபஅதிபர் எஸ்.சதீஸ்வரன்,பழைய மாணவிகள் சங்கத் தலைவி திருமதி.பத்மஸ்ரீ இளங்கோ,பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் எஸ்.சந்திரசேன, உட்பட பெற்றோர்கள்,மாணவர்கள்,நலன்விரும்பிகள் கலந்துகொண்டார்கள்.
இதன்போது அதிதிகளை மாலை அணிவித்து மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.மங்கள விளக்கேற்றல்,மும்மத இறையாசிகள்,வரவேற்புரை,தலைமையுரை,கலைநிகழ்வுகள்,அதிதிகள்உரை என்பனவற்றுடன் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்,இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள்,பாடரீதியாக முதன்மையாக சித்தியடைந்த மாணவர்களேன 170 மாணவர்கள் அதிதிகளினால் பாராட்டப்பட்டு,பார்வையாளர்களினால் கைதட்டி உற்சாகப்படுத்தலுடன் சான்றிதழ்கள்,வெற்றிக்கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டன.இந்த பரிசளிப்பு விழாவில் பார்ப்போரை கவர்ந்திழுக்கப்பட்ட கலைநிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் அரங்கேற்றம் செய்யப்பட்டு எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தியது.குறிப்பாக கல்வி இராஜங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் அவர்களின் விஷேட பாராட்டுக்களும்,நன்றிகளும் இம்மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும்,கல்லூரி முதல்வருக்கும் கிடைத்திருந்தது.