மட்டக்களப்பு, களுவன்கேணி கிராமத்தில் உள்ள முதியோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர்வுணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (05) ஞாயிற்றுக்கிழமை களுவன்கேணி பல்நோக்கு பொது கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர்வுணவு பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான நிலையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு நண்பர்கள் குழாம் மட்டக்களப்பு இளைஞர்களின் நிதி உதவியின் கீழ் இந்த அத்தியாவசிய உலர்வுணவு பொதிகளை களுவன்கேணி முதியோர் சங்கதலைவர் வைரமுத்து சிவலிங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய மட்டகளப்பு இளைஞர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.