அரச உடமையாக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு வழங்க அரசு உடனடி நடவடிக்கை

அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட சீனி, அரிசி, பால்மா, நெல் போன்ற பொருட்களை மக்களுக்கு கட்டுப்பாட்டு விலையில் வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.
 
அண்மையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கான்பித்து பதுக்கி வைத்திருந்த பொருட்களை நுகர்வோர் அதிகார சபை கைப்பற்றி அரசுடமையாக்கியிருந்தது. 
 
இவ்வாறு அரசுடமையாக்கப்பட்ட பொருட்களை உடனடியாக மக்களுக்கு சென்றடையச் செய்ய அரசு மேற்கொண்ட தீர்மானத்திற்கமையவாக உணவு ஆணையாளர் திணைக்களம் மொத்தவியாபாரிகள் மூலமாக கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
இதற்கமைவாக இப்பொருட்களை நாடளாவிய ரீதியில் மொத்த வியாபாரிகள் கொள்வனவு செய்து கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய முடியும். இதற்காக மொத்த வியாபாரிகள் உணவு ஆணையாளர் திணைக்களத்தினை 011 3681797 அல்லது 0769 906 906 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொண்டு மக்களுக்கான உடணடி வியாபார தேவைகளை பூர்த்தி செய்யுமாறு உணவு ஆணையாளர் திருமதி. கிருஷ்னமூர்த்தி தெரிவித்துள்ளார். 
 
இதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்ட மொத்த வியாபரிகளும் இவ்விடயத்தில் அக்கரையெடுத்து இம்மாவட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய முன்வருமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Related posts