கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில் (14) நேற்று இடம்பெற்றது.
கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜிஹானா அலிஹ்ப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் பிரதம அதிதியாகவும் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.அப்துல் ஜலீல் விசேட அதிதியாகவும் கலந்துகொண்டார்.
விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில்; திறமைகளை வெளிக்காட்டிய வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், மற்றும் ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோர்கள் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதில் நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய நாடுகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் கராத்தே விளையாட்டில் வெண்கலப்பதக்கம் பெற்ற விளையாட்டு பயிற்றுவிப்பாளரான சௌந்தாராஜா பாலுராஜிற்கு பாராளுமன்ற உறுப்பினரினால் மாலை அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்வி பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.