பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல்

மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல்  மட்டக்களப்பில் நடைபெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கல்வி அமைச்சு சம்பந்தப்பட்ட கல்வி திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றன

கல்வி அமைச்சின் ஊடாக மாகாண பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய மாகாண கல்வி பணிப்பாளர்களின் தலைமையின் கீழ் மாவட்ட ரீதியில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் இதேவேளை மாணவர்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மட்டக்களப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பொதுசுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான வலயக்கல்வி அலுவலக அதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன .  

 
அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மட்டக்களப்பு நகரில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளில் உயர்தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் மட்டக்களப்பு புளியந்தீவு பொதுசுகாதார பரிசோதகர் அருணாசலம் ராஜ்குமார் . கல்லூரி பிரதி அதிபர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related posts