மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி கிராமத்தின் ஒரு பகுதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வான்வழி பாய்ந்ததால் சித்தாண்டி-2,3,4 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலுமுள்ள 1600 கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிராமத்தினுள் நீர்மட்டம் படிப்படியாக உயர்வடைகின்றமையால் மக்கள் அச்சத்தின் மத்தியிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பல குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வான்வழி பாய்ந்துள்ளமையால் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.