‘ தர்ம்பிரபாஸ்வர ‘ என்கின்ற வாழ் நாள் சாதனை விருது

கத்தோலிக்க மத விவகார அமைச்சினால் இலங்கையில் சகல மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட 37 பேருக்கு ” தர்ம்பிரபாஸ்வர ” என்கின்ற இந்த விருது வழங்கப்பட்டது. 

 
 இது கத்தோலிக்க/ கிறிஸ்தவ திரு அவையில் சமுகத்திற்கும் சமயத்திற்கும் தொண்டாற்றுவோரை கௌரவப்படுத்தும் வண்ணம் வழங்கப்படும் இவ்விருதினை மட்டக்களப்பு மறைமாவட்டத்தினை பிரதிநிதித்துவ படுத்தி இருவருக்கு வழங்கப்பட்டது. 
 
அந்த வகையில் பத்மநாதன் டென்னிஸ்டன் என்பவருக்கு கொழும்பு  BMICH மண்டபத்திலே வாழ்நாள் சாதனையாளர் கௌரவிப்பு  விழாவின் போது இவர் கௌரவிக்கப்பட்டார்.
 
இந்த வெற்றியின் பின்னி பற்றி கருத்துரைக்கையில் 
 
தன்னை தெரிவு செய்த அருட்தந்தை பயஸ் பிரசன்னா மற்றும் அவரோடினைந்த தெரிவுக்குழு உறுப்பினர்கள் அருட்தந்தை யேசுதாசன் ஆகியோருக்கும் நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.
 
 இத்தேசிய விருதானது ஆக்கத்திறன் மிக்க எழுத்து துறைக்காக கவிதை, நாடகம், வியாகுல பிரசங்கங்கள் போன்றவற்றில் ஈடுபட்டு சமூக சமய தொண்டாற்றியமைக்காக எனக்கு வழங்கப்பட்டது .
 
 இவ்விருதிற்கு தகுதி பெறும் வண்ணம் எனக்கு ஒரு தகுதியை உருவாக்கிய எனது பாடசாலை சது/ ஹோலிகுரோஸ் மகா வித்தியாலயம் அதிலும் விசேட விதமாக எனக்கு தமிழ் கற்பித்த சத்தியவாணி மற்றும் குமாரராசா ஆசிரியர்களையும் நன்றியோடு நினைவு கூறுகின்றேன்
 
 மேலும் எனக்கு ஊக்கமூட்டிய நண்பர்கள், பெற்றோர், சொந்தபந்தங்கள் எல்லோருக்கும் நன்றி கூறுகின்றேன், என்னை ஒரு கலைஞனாக கருதி மதிக்கும் சகல உள்ளங்களுக்கும் நன்றி கூறுவதுடன் என்னை  கௌரவப்படுத்திய பங்குத்தந்தை அருட்பணி L. ஜெயகாந்தன் அடிகளாருக்கும் என்னை ஊக்கப்படுத்தும் அருட்சகோதரிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன் என்றார். 

Related posts