எஸ்.சபேசன்
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்முனை ரோட்டறிக் கழகத்தின் ஏற்பாட்டில் அப்பியாயக் கொப்பிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை 13 ஆம் திகதி அதிபர் என் பிரபாகர் தலைமையில் இடம்பெற்றது.
இப்பாடசாலையில் கல்விபயிலும் 271 மாணவர்களுக்கும் அப்பியாசக் கொப்பியினை வழங்குவதற்காக 144000 ரூபா நிதி உதவியினை லண்டனில் வசிக்கும் சாணுஜா மகிதரன் அவர்கள் வழங்கிவைத்திருந்தார்
குறிப்பாக இவர் லண்டனில் தொழில் பெற்று முதல் மாதத்தில் பெற்றுக்கொண்ட சம்பளத்தினை ஏழை மாணவர்களுக்கு கல்விக்காக செலவுசெய்துள்ளமை பாராட்டத்தக்கது.
இந் நிகழ்வில் கல்முனை ரோட்டறிக்கழகத்தின் தலைவர் எஸ்.புஸ்பராசா,செயலாளர் எம்.சிவபாதசுந்தரம் பிரதி அதிபர் க.பேரானந்தம் .நாவிதன்வெளி இலங்கை வங்கியின் முகாமையாளர் கு.சசிதரன் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஜெயசுதன் முன்னாள் செயலாளர் கு.மதிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு இவ் அப்பியாசக் கொப்பிகளை வழங்கிவைத்தனர்