10வது ஆண்டு அகவை நிறைவு செய்த பிரான்ஸ் சுவாசிலுறூவா தமிழ்ச்சோலை பள்ளி

பிரான்ஸில் இருந்து இரா. தில்லைநாயகம்
 
பிரான்சு சுவாசி லு றூவா தமிழ்ச்சங்கம் – தமிழ்ச்சோலைப் பள்ளியின் 10 ஆவது ஆண்டுநிறைவு விழா கடந்த சனிக்கிழமை   சுவாசி லு றூவா தமிழ்ச்சங்கம்  தலைவர் அலோசியஸ் கையினஸ் தலைமையில்  இடம்பெற்றது. 
 
பிரான்ஸ் நாட்டில் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் கலை கலாசார விழுமியங்கள் . பண்பாடுகளை கட்டிக்காத்து எதிர்கால சந்ததியினர் தமிழ் உணர்வோடு வாழ வேண்டும் என்பதற்காக தமிழ் சோலை தலைமை பணியகத்தின் கீழ் பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் தமிழ் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
 
அதன் ஒரு அங்கமாகவே பிரான்சு சுவாசி லு றூவா தமிழ்ச்சங்கத்தின் தமிழ் சோலை பள்ளியின் 10வது ஆண்டு நிறைவு விழா  மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.
 
உயிர் நீத்த உறவுகளுக்கான  அகவணக்கம் இடம்பெற்றதுடன் பாடசாலை மாணவர்களினாலும் ஆசிரியர்களினாலும் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டதுடன் அனைத்து கலை நிகழ்வுகளும் ஆரம்பமாகின.
 
அதனடிப்படையில் ஆரம்ப பிரிவு தொடக்கம் உயர் தரம் வரையான அனைத்து மாணவர்களது வரவேற்பு நடனம். வில்லுப்பாட்டு. கவிதை அரங்கம். விவாத அரங்கம்.  நாடகம் 
மற்றும் நாட்டிய நாடகம்  ஆங்கில நடனம் என்பன நடைபெற்றன..
 
இந்நிகழ்வில்    தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் சார்பில் கலந்துகொண்ட  செயற்பாட்டாளர் எஸ் அகிலன் அவர்கள்  ஆசிரியர்., மாணவர்களுக்கான மதிப்பளிப்பினை  செய்திருந்ததுடன் கருத்துரையினையும்  வழங்கினார்.
 
 தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்ததுடன் நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்  எனும் பாடலுடனும்  தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும்  நிகழ்வுகள் அனைத்தும் நிறைவிற்கு வந்தது.
 

Related posts