மட்டக்களப்பு எருவில்கிராமத்தினைச் சேர்ந்த சித்தவைத்தியர் இராமச்சந்திரன் ஜீவராஜா அவர்கள் கீர்த்திசிறி தேசபந்து வைத்திய அபிமானி மற்றும் வைத்திய ரத்னா ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தேசிய சமாதான சங்கம் சார்பாக வைத்தியத்துறைக்கு ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்புமிக்கசேவையினைப் பாராட்டி கீர்த்திசிறி தேசபந்து வைத்திய அபிமானி விருது வழங்கப்பட்டதுடன் அத்துடன் சர்வதேச ஆசிய ஆயுர்வேத வைத்திய ஆய்வாளர் விருதான வைத்திய ரத்னா விருதும் வழங்கிவைக்கப்பட்டது .
இந்நிகழ் வானது 03.02.2019 அன்று கொழும்பு பண்டாரநாயக்கஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது
போரதீவுப்பற்று பிரதேசபையில் பணியாற்றும் இவர் சித்த வைத்தியர் பரம்பரையினைச் சேர்ந்தவராவார் இவரது பாட்டன் பாட்டி போன்றவர்களும் சித்த வைத்தியத்துறையில் சிறப்புப் பெற்று விளங்கியவர்கள் அத்தோடு இவரது தாயாரான திருமதி மகேஸ்வரிஇராமச்சந்திரன் அவர்களும் பரம்பரை வழிவந்த சித்த வைத்தியராகத் திகழ்கின்றார்
இவ் விருதினைப் பெற்றுக் கொண்ட சித்தவைத்தியர் ஜீவராசா அவர்கள் கிழக்குமாகாண சித்தவைத்தியசங்கத்தின் உறுப்பினராகவும் மண்முனை தென் எருவில் பற்று ஆயுர் வேத பாதுகாப்பு சபையின் உப செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார்
இவர் மட்டக்களப்பு சிவானந்தா தேசியபாடசாலை இராமகிருஷ்ணன் மிஷன் ஆகிய பாடசாலைகளின் பழையமாணவராக இருப்பதுடன் கோகிலவாணியின் கணவருமாவார்