அவரவர் கடமையில் கவனமிருந்தால் வெற்றி நிச்சயம்! காரைதீவுக் கடற்கரை உலகசிறுவர்தின விழாவில் தவிசாளர்!

இங்கு சிறுவனொருவன் போத்தலில்மண்நிரப்பியதை அனைவரும் கண்டோம்.அவனது முழுநோக்கமும் மண்நிரப்புவதிலே இருந்தது. ஏனையோர்மற்றவர்களைப்பார்த்துப்பார்த்து நிரப்பினார்கள். கவனம்கலைந்தது. எனவே அவரவர் கடமையில் கவனமிருந்தால் வெற்றி நிச்சயம்.
 
இவ்வாறு உலகசிறுவர்தினவிழாவில் உரையாற்றிய காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ;தெரிவித்தார்.
 
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு காரைதீவு விபுலாநந்த மென்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையின் வருடாந்த மாபெரும் சிறுவர்தினவிழா  நேற்று(அக்.1) செவ்வாயன்று பிற்பகல் 3மணியளவில் காரைதீவு கடற்கரையில் நடைபெற்றுது.
 
மொன்டிசோரி ஆசிரியைகளான  நிலாந்தினி ரம்யா தலைமையில் நடைபெறவுள்ள இப்பெருவிழாவில் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்  பிரதம அதிதியாகக்கலந்து சிறப்பித்தார்;
 
உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கௌரவஅதிதியாகக்கலந்துகொண்டார்.
பெற்றோரின் பூரண ஒத்துழைப்புடன் கடற்கரையில்  சிறுவர் விளையாட்டுப்போட்டி வழமைபோல் இடம்பெற்றது .
அவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டது.விளையாட்டுஆசிரியர் ஜெயநாதன் சோபிதாஸ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.

Related posts