இந்த நாட்டிலே எதிரணி அரசியலில் இருந்து கொண்டு நாட்டில் இடம்பெறும் அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்ற சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்து வருகின்றது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமாகிய தவராசா கலையரசன் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை மாலை ( 29) நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள வீரச்சோலை அ.த.க. பாடசாலைக்கு ஒலி பெருக்கி சாதனங்களை பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் பண்முக படுதப்பட்ட நிதியிலிருந்து வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ். திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது.
இங்கு மேலும் தெரிவிக்கையில்
இந்த நாட்டிலே எதிரணி அரசியலில் இருந்து கொண்டு நாட்டில் இடம்பெறும் அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்ற சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்து வருகின்றது. இந்த நாட்டில் நல்லதொரு தீர்வை பெற வேண்டும் என்பதற்காக ஒரு புதிய ஒரு தலைவரை உருவாக்கி இந்த நாட்டின் பெரும்பான்மை கட்சிகள் இரண்டைனை ஒன்றிணைத்து ஆட்சியாளரை தமிழ் மக்களுக்கு நிலையான தீர்வை பெற்றுகொள்ளும் நல்ல நோக்கத்தோடு எமது தலைமைகள் பல முன்னெடுப்புகளை முன்னெடுத்திருந்தது அதுவும் பூரண வெற்றியை தரவில்லை.
கடந்த காலங்களில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களில் நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள தமிழ் கிராமங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கபட்டது. இந்த நகர திட்டமிடல் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சினூடாக மேற்கொள்ளபப்ட்ட வேலைத்திட்டமானது திட்டமிட்டு ஒரு சமூகத்திற்கு மாத்திரம் மேற்கொள்ளும் வேலைத்திட்டமாகவே அமைந்தது. குறிப்பாக குளாய் மூல குடிநீர் விடயத்தில் தமிழ் கிராமங்கள் திட்டமிட்டே புறக்கணிப்பு செய்யப்பட்டது.
கடந்த கிழக்கு மாகாண ஆட்சியில் கட்சி சார்ந்த, சமூகம் சார்ந்த ,இனம் சார்ந்த அரசியலை மேற்கொண்டிருந்தனர். கிழக்கு மாகாணத்திலே மாகாணசபையூடாக ஒதுக்கப்பட்ட நிதியும் விகிதாசார அடிப்படையிலேதான் ஒதுக்கப்பட்டது. நாங்கள் அந்த விகிதாசார அடிப்படையை நாங்கள் முற்றுமுழுதாக எதிர்த்தோம். ஏன் எதிர்த்தோம் என்றால் வடகிழக்கிலே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் பிரதேசம் தமிழ் இனம் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசு விஷேட திட்டத்தை முன்வைத்திருக்க வேண்டும்.
அழிவுற்ற பிரதேசங்களுக்கு விஷேட நிதிகளை ஒதுக்கி அழிவுகளை சந்தித்த சமூகத்தை ஏனைய சமூகங்களோடு ஈடுகொடுக்க கூடியவகையில் வளர்ச்சியை ஏற்படுத்தி விட்டு விகிதாசார அடிப்படையை கொண்டு வந்திருக்க வேண்டும். அவ்வாறான தூர நோக்கம் அற்ற செயற்பாடு காரணமாக பிந்தங்கிய கிராமங்களுக்கு கிடைக்க வேண்டிய வழங்கள் மிகவும் குறைவாகவே
கிடைத்தது. இதற்காக நான் கிழக்கு மாகாண அமைச்சர்களாக இருந்தவர்களோடு முரண்பட வேண்டியிருந்து என குறிப்பிட்டார்.
இந்த நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் , பிரதேச சபை உறுப்பினர்களான அ.சுதர்சன், நா.தர்சினி , பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள், பழய மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.