முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் சொற்பிரயோகம் விரும்பவே தகாதது  – முன்னாள் தவிசாளர் இராசையா கண்டனம்

மலையக உறவுகளை குறிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பயன்படுத்திய சொற்பிரயோகம் ஏற்படையதும், விரும்ப தக்கதும் அல்ல என்று இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையா தெரிவித்தார்.

 இவரின் காரைதீவு இல்லத்தில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து இது தொடர்பாக கண்டனம் வெளியிட்டபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு அதாவுல்லா பொறுப்பான அமைச்சர் பதவியில் இருந்தவர். அரசியல் கட்சி ஒன்றின் தலைவரும் ஆவார். இந்நாட்டு மக்கள் அனைவருமே அந்த சொற்பிரயோகம் தவறானது என்பதை நன்றாகவே அறிவார்கள். மலையக உறவுகளை காயப்படுத்துகின்ற அந்த சொல் பொதுவெளியில் பயன்படுத்தப்படுவதே கிடையாது. சபை நாகரிகம் என்பது மிகவும் முக்கியமானது. எனவே அவர் எந்த நோக்கத்தில் அந்த வார்த்தையை கையாண்டு இருப்பினும்கூட அவரை எமது கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. இது தொடர்பாக அவருடைய விளக்கங்கள், வியாக்கியானங்கள் வலு அற்றவை ஆகும் என்பதையும் இவ்விடத்தில் சொல்லி வைக்கின்றோம். அந்த வார்த்தையை கையாண்டமைக்காக அவர் வெட்கப்பட வேண்டும். மாறாக அதை நியாயப்படுத்த முயல்வது ஆரோக்கியமான விடயம் அல்ல.

 

Related posts