நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 38 பயிற்றப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உள்ளீடுகள் வியாழக்கிழமை நாவிதன்வெளி வேள்ட் விஷன் நிறுவன அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வு வேள்ட் விஷன் முகாமையாளர் எஸ்.செல்வபதி திட்ட இணைப்பாளர் ஜூட் அன்ரன் ஆகியோரால் ஒழுங்கபடுத்தப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. ஆர்.லதாகரன் கால்நடை வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.எம்.நபீர் மாவட்ட செயலக அரசசார்பற்ற நிறுவன இணைப்பாளர் ஐ.எல்.எம்.இர்ஃபான் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
வேள்ட் விஷன் நிறுவனம் பிரதேச செயலகம் மற்றும் கால்நடை அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து 38 பயிற்றப்பட்ட பயனாளிகளுக்கும் தையல் இயந்திரம், ஆடு, நீர்ப்பம்பி, அரிசி மற்றும் மிளகாய் அரைக்கும் இயந்திரம் என்பன வழங்கி வைக்கப்பட்டன.