புலனாய்வு உத்தியோகத்தர்கள் நுகர்வோர் உரிமைகள் பற்றி கருத்தரங்கு!

கைத்தொழில் வணிக அமைச்சின் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் அரச அலுவலகங்கள் தோறும் சென்று பாவனையாளர் பாதுகாப்பு தொடர்பாக விசேட கருத்தரங்குகளை நடாத்திவருகின்றனர்.
 
அந்தவகையில் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர்களான ஏ.எச்.எச்.எம். நபார் எம்.வை.எம்.யசார் ஆகியோர் மாவட்டத்திலுள்ள சகல காரியாலயங்களுக்கும் சென்று கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றனர்.
 
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கான கருத்தரங்கு  நடைபெற்றது.
 
வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம்தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புலனாய்வு உத்தியோகத்தர்கள் விளக்கமளித்தனர்.
 
கூடவே பாவனையாளர் பாதுகாப்புக்கான வழிகாட்டி கையேடொன்றும் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
உத்தியோகத்தர்களால் எழுப்பப்பட்ட பல சந்தேகங்களுக்கு அவர்களால் பதிலளிக்கப்பட்டன.
 

Related posts