தமிழ்தேசிய பொங்கல் விழா இடம்பெறவுள்ளது.தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் பங்குபற்றுதலுடன்

பட்டிப்பளையில் தமிழ்தேசிய பொங்கல் விழா இடம்பெறவுள்ளது.தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் பங்குபற்றுதலுடன் தமிழர்களின் கிராமிய கலை,கலாச்சார, பண்பாட்டு நிகழ்வுகளுடன் கோலாகலமான பொங்கல் விழா.

மட்டக்களப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் 
“தமிழ்தேசிய பொங்கல் விழா”
எதிர்வரும் சனிக்கிழமை(18) பிற்பகல் 2.00 மணியளவில்
பட்டிப்பளையில் பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் தமிழர்களின் கலை,கலாச்சார, பண்பாட்டு அம்சங்களுடன் இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
 

இப்பொங்கல் விழாவிற்கு பிரதம அதிதியாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும்,விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசனும்,கௌரவ அதிதிகளாக தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,த.கனகசபை, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், மாகாண சபை உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள்,பிரதி தவிசாளர்கள்,உறுப்பினர்கள்,கட்சியின் உறுப்பினர்கள்,தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள்,பொதுமக்கள் கலந்து   கொள்ளவுள்ளார்கள்.இப்பொங்கல் விழாவில் கிராமிய கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் தொடக்கவுரையினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனும்,தலைமையுரையினை தவிசாளர் சி.புஸ்பலிங்கமும்,சிறப்பு தமிழ்தேசிய உரையினை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும்,தமிழ்தேசிய கொள்கை விளக்கவுரையினை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் நிகழ்த்தவுள்ளார்.

Related posts