5வருட காலமாக தீர்க்கப்படாதிருந்த கல்முனை தொடர்மாடி வீட்டுத்திட்ட கழிவு நீர்ப்பிரச்சினைக்கு நிரந்தரதீர்வு.

5வருட காலமாக தீர்க்கப்படாதிருந்த கல்முனை தொடர்மாடி வீட்டுத்திட்ட கழிவு நீர்ப்பிரச்சினைக்கு நிரந்தரதீர்வு காணப்பட்டுள்ளது.
 
இம்மாடிவீட்டுத்திட்டம் கடந்த 2004-12-26 அன்று சுனாமியினால் பாதிக்கப் பட்டவர்களுக்காக கட்டப்பட்டது. ..
இங்கு கடந்த 5வருட காலமாக மலசல நீர் செல்லும் வழியில் சில அடைப்புகள் ஏற்பட்டு ஓரிரு இடங்களில் நீர் தேங்கி கிடந்தது. கழிவுநீர் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுவதும் துர்நாற்றம் வீசுவதும் வழக்கமாகஇருந்துவந்தது.
 
 இதைப் பற்றி சம்மந்தப் பட்ட அதிகாரிகளின் கவனத்தில் கொண்டு சென்றும் 5வருடமாக எந்த பயனும் கிடைக்கவில்லை.
 
இங்கு  சுனாமியினால் பாதிக்கப் பட்டவர்களுக்காக 2019-12-26 அன்று நினைவஞ்சலி நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்  இந்த அசுத்த நீர் இருக்கும் இடத்தை பார்வையிட்டார். 
 
அவர் எங்களிடம்அந்த மக்களிடம் சென்று  வினாவினார் . அதற்கு நாங்கள் கூறினோம் அந்தமக்கள் இதைப் பற்றறி இனி கூறுவதற்கு ஒன்றும் இல்லை 5வருட காலமாக இப்படித்தான் கிடக்கிறது என்று இஇஅதன் பிறகு வேண்டாவெறுப்பில் பதிலளித்தார்கள்.
 
உடனடியாக இந்த இடத்தை சுத்தம் செய்து நான் தருகிறேன் என்று கூறி விட்டு செற்ற அவர்மறு நாள் காலையில் உடனடியாக செயல் பட்டு கல்முனை மாநகர சபை முதல்வரின் தயவோடு  கனரக வாகனங்கள் சகிதம்  3தினங்களில் செய்து முடித்தார்.
 
 இந்த 5வருட மக்கள் எதிர் கொண்ட கழிவு நீர் பிரச்சினையை.. கல்முனை மாநகர சபை முதல்வர் மாநகர சபை உறுப்பினர் ராஜன் ஆகியோருக்கு  கோடி நன்றிகள் தெரிவித்து கொள்கிறோம் என்று கல்முனை நியூ பவர் ஸ்டார் விழையாட்டுக் கழகத்தினரும் ஊர் மக்களும் நன்றிகள் கூறுகின்றனர்

Related posts