‘தாயகத்தலைமகன் சம்பந்தன் ஐயா’ அவர்கள் இன்று 87வது அகவையில் கால்பதிக்கிறார். அரியத்தின் கவிவாழ்த்து

தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவரும், முன்னாள் எதிர்கட்சி தலைவரும், திருகொணமலை மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான “தாயகத்தலைமகன் சம்பந்தன் ஐயா” அவர்கள் இன்று (05/02/2020) 87, வது அகவையில் கால்பதிக்கிறார்,
 
அரசியல் வாழ்வில் 50, ஆண்டுகளை கடந்தவர், பாராளுமன்ற உறுப்பினராக 1977, ம் ஆண்டு முதன் முதன் திரிகோணமலை தொகுதியில் வேட்பாளராக தமிழர் விடுதலை கூட்டணி மூலம் வேட்பாளராக களம் இறங்க தெரிவானாலும் அதற்கு முன்னமே 1966 ம் ஆட்டுப்பகுதியில் அவர் தந்தை செல்வாவுடன் பல அகிம்சைப்போராட்டங்களிலும் பங்கேற்றவர் அதனால் ஒருதடவை பனாக்கொடை இராணுவ முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டு விடுதலையான வரலாறு சம்பந்தன் ஐயாவுக்கு உண்டு,
 
அமனால்தான் தமிழ்தேசிய விடுதலை அரசியலில் தந்தை செல்வா காலத்திலும் இதன்பின் தலைவர் பிரபாகரன் காலத்திலும் இருவருடனும் பழகிய ஒருதலைவராக சம்பந்தன் ஐயா உள்ளார்.
 
2001, ம் ஆண்டு தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவான காலம் தொட்டு இன்றுவரை அதன் தலைவராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு 2009 மே 18,ம் திகதி தொடக்கம் விடுதலைபுலிகள் மௌனத்திற்குப்பின் வடக்கு கிழக்கு தமிழ்தேசிய மக்களின் தமிழ்தேசிய அரசியலை இராஜதந்திர செயல்பாட்டு தளத்திற்கு கொண்டு சென்ற தலைவராகவும் திகழ்கின்றார்.
 
இலங்கை பாராளுமன்றத்தில் தற்போது அங்கம் வகிக்கும் 225, பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகூடிய வயதை (87,வயது) உடைய அனுபவ ரீதியான அரசியல் ஆளுமையை கொண்ட ஒருவராக சம்பந்தன் ஐயா மட்டுமே உள்ளார்,
 
ஒரு சட்டத்தரணியாக, சட்டவல்லுநராக, அரசியல் வாதியாக, பாராளுமன்ற உறுப்புனராக, தமிழதேசிய கூட்டமைப்பின் தலைவராக சேவையாற்றும் இரா.சம்பந்தன் ஐயாவுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு கிளையினால் கடந்த 2014, ம் ஆண்டு “தாயகத்தலைமகன்” என்ற உயர் கோரவத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
 
அன்னார் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும் என இன்றய 87, வது அகவை நாளில் பிரார்த்திப்போம்.
 
இராஜவரோதயம் சம்பந்தன் (Rajavarothayam Sampanthan, பிறப்பு: 5 பெப்ரவரி 1933) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவரும் ஆவார். 1977 முதல் 1983 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன், பின்னர் 2001 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். 2015 செப்டம்பர் 3 முதல்[1][2][3] 2018 டிசம்பர் 18 வரை இவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.
 
(பா.அரியநேத்திரன்)



🌈💥🔥🌈💥🔥🌈💥🔥🌈💥🔥🌈💥
#87_அகவை_காணும் இரா.சம்பந்தன் ஐயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்:..!
🙏🙏🙏🙏🙏🙏🙏{05/02/2020}🙏🙏
🏠
தள்ளாத வயதிலும் தளராத மன உறுதி!
தடைகளை கண்டும் தன்னம்பிக்கை பேச்சு!
விடைகளை காணாவே தொடர் விடாமுயற்சி!
விடுதலை அரசியலில் ஐம்பதாண்டுகள் பூர்த்தி!
🏠
தந்தை செல்வா தலைவர் பிரபா இருவருடன்!
இணைந்து செயல்பட்ட ஒருவர் இவர்தான்!
இலங்கை அரசியல் இனவாத தலைமைகள்!
மனதை புரிந்து மதிநுட்பமாய் பணி செய்தீர்!
🏠
எண்பத்தேழு அகவையில் தடம் பதிக்கும்!
எம்மினத்தலைமையாய் இப்போது உள்ளீர்!
தாயகத்தலைமகன் இரா.சம்பந்தன் ஐயா!
தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவரும் நீவீர்!
🏠
நூறாண்டு வாழ்ந்து தளராது பணி செய்து!
பேரோடும் புகழோடும் பெருமை ஓங்கவே!
பிறந்த இந்நாளில் வாழ்துகிறோம் நாங்கள்!
நிறைந்த மகிழ்வுடன் நீடுழி காலம் வாழ்கவே!
🏠
✍🏿அம்பிளாந்துறையூர் அரியம்✍🏿
🟡🔴🟢🟡🔴🟢🟡🔴🟢🟡🔴🟢🟡🔴

Related posts