ஆசிரியர்களின் அர்ப்பணிப்பினால் கலைமகள் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிட வசதிகள்.

ஆசிரியர்களின்,அதிபர், பிரதி அதிபர் ஆகியோரின் அர்ப்பணிப்பான சேவைக்குக் கிடைத்த வெகுமதியாகவே நான் இந்த இரண்டு கோடி 40 இலட்ச ரூபாய் செலவில் அமைந்த ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்திற்கு கிடைத்த மாடிக் கட்டிட வசதிகளைப் பார்க்கின்றேன் என மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் வி. மயில்வாகனம் தெரிவித்தார்.

இதனால் தற்போதைக்கு  சுமார் 300 மாணவர்களும், இன்னும் சில மாதங்களில் அடுத்த மாடிக்கட்டிட நிருமாணம் பூர்த்தியானதும் 450 மாணவர்களும் பயிலக் கூடிய நவீன மாடிக் கட்டிட வசதி கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பாடசாலை அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கமைய நிருமாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடத் திறப்பு விழா திங்கட்கிழமை 03.02.2020 பாடசாலை அதிபர் எஸ். தி;லைநாதன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர் என். இராஜதுரை உட்பட  ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன், இந்தப் பாடசாலையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும், தேசியப் பாடசாலையாகத் தரமுயர்த்துவதற்கும் எனது பதவிக் காலத்தில் முழு முயற்சி எடுத்து அதனை அடுத்து வரப்போகின்ற கல்வி அதிகாரிகளுக்கும் தெரிவித்திருக்கின்றேன்.

அதனடிப்படையில் இந்த பாடசாலைக்கு நவீன வசதிகளோடு அமைந்த உள்ளக விளையாட்டு அரங்கும் நீச்சல் தடாகமும் அமையப் பெறும்.

இந்தப் பாடசாலையலில் கற்பிக்கின்ற அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் நலன் விரும்பிகளால் இந்தப் பாடசாலை மாணவர்கள்; முன்னேற்றம் கண்டு வருகின்றார்கள். நானும் இந்தகைய கூட்டுப் பொறுப்பான அர்ப்பணிப்பைப் பாராட்டுகின்றேன்.’ என்றார்.

Related posts