மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான (SESEF) ஒத்துழைப்பு அமைய நிறைவேற்றுக்குழுவின் அமர்வொன்று நேற்று (31) மாலை தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.
அமையத்தின் தலைவரும் ஊவா வெல்லச பல்கலைக்கழக பதிவாளருமான எம்.எப் ஹிபத்துள் கரீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமையத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் எம்.ஐ.எம். வலீத், அமையத்தின் நிதிப்பணிப்பாளரும், கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப்பதிவாளருமான எம்.எப். மர்சூக், தென்கிழக்கு பல்கலைக்கழக பொருளியல்துறை தலைவரும், அமைப்பின் கல்வி துறை சார்ந்த விடயங்களுக்கான பணிப்பாளருமான கலாநிதி ஏ. ஏ. நுபைல், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், அமைப்பின் சமூக வலுவூட்டலுக்கான பணிப்பாளருமான ஏ.எம். றியாஸ் அஹமட் ஆகியோர் கலந்து கொண்டு எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனை நடத்தினர்.
கடந்த ஐந்து வருடகாலமாக இயங்கிவரும் இவ்வமையம் கடந்த கொரோனோ தொற்று மற்றும் நாட்டின் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக சீராக இயங்க முடியாமல் போனது. இந்த ஆலோசனை கூட்டத்தின் பின்னர் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோரை சந்தித்து அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி கலந்துரையாடுவது என தீர்மானிக்கப்பட்டது.