கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 18பேருக்கு கொரோனாத்தொற்று ஏற்பட்டுள்ளது.மட்டு.மாவட்டத்தி லுள்ள ஓட்டமாவடியில் சம்பவித்துள்ளது.
அதேவேளை கிழக்கில் கொரோனாத்தொற்றுக்களின் எண்ணிக்கை நேற்றையதினம்(9)சனிக்கிழமை 1557 ஆகியது.
புத்தாண்டில் கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் திவீரமாகிவருகின்றது.
கடந்த மார்ச் மாதமிருந்து பேலியகொட மூலமாக இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 351பேரும் கல்முனை பிராந்தியத்தில் 924பேரும் திருமலை மாவட்டத்தில் 197ரும் அம்பாறை பிராந்தியத்தில் 62பேருமாக 1534பேர் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
மேலும் வெளிநாடு மினுவாங்கொட கந்தக்காடுகொத்தணி வெலிசற கடற்படைமுகாம் போன்ற மூலங்களிலிருந்து மீதி 23 தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன.
10மரணங்கள்!
இதுவரை கிழக்கில் சம்மாந்துறை ஒலுவில் சாய்ந்தமருது அட்டாளைச்சேனை வவுணதீவு ; காத்தான்குடி நாவிதன்வெளி ஆயைடிவேம்பு உகனை இறுதியாக காத்தான்குடியிலும் மொத்தம் 10 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.
கல்முனைப்பிராந்தியத்தில் 06பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 03பேரும் அம்பாறைப்பிராந்தியத்தில் ஒருவருமாக இந்த 10 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.
இத்தரவுகளை கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கல்முனை பிராந்தியத்தில் 924..
கல்முனைப்பிராந்தியத்தில் 924ஆக தொற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. இப்பிராந்தியத்துள்வரும் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை 886பேர் இனங்;காணப்பட்டுள்ளனர்.
அதில் அக்கரைப்பற்று 312 தொற்றுக்கள் அடுத்ததாக கல்முனை தெற்கு 227 அட்டாளைச்சேனை 87 பொத்துவில் 78 சாய்ந்தமருது 55 ஆலையடிவேம்பு 36 இறக்காமம் 24 சம்மாந்துறை 27 நிந்தவுர் 18 கல்முனைவடக்கு 17 திருக்கோவில் 15 காரைதீவு 14 நாவிதன்வெளி 14 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கல்முனை மாநகரில் 299
அதேவேளை கல்முனை மாநகரஎல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 299 தொற்றுக்களாக அதிகரித்திருக்கிறது.
கல்முனை தெற்கி;ல் 227பேரும் சாய்ந்தமருதில் 55பேரும் கல்முனை வடக்கில் 17பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனையின் 11 கி.சே.பிரிவுகளில் முடக்கச்செயற்பாடு 10வது நாளாக அமுலில்உள்ளது.
மட்டக்களப்பில் 351…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 351ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கூடியதாக காத்தான்குடியில் 146 பேரும் கோறளைப்பற்றில் 68 பேரும் ஓட்டமாவடியில் 33பேரும் களுவாஞ்சிக்குடியில் 31பேரும் மட்டக்களப்பில் 26பேரும் ஏறாவூரி;;ல் 18 பேரும் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.
திருமலையில் 197…
திருமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் திருமலை நகரில் 98பேரும் மூதூரில் 47பேரும் கிண்ணியாவில் 18பேரும் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளனர்.அங்கு ஆறு பாடசாலை மாணவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.
கிழக்கில் ஆகக்குறைந்த கொரோனாத்தொற்றாளர்கள்62பேர் அம்பாறை சுகாதாரப்பிரிவிலும் ஆகக்கூடிய தொற்றாளர்கள் 942பேர் கல்முனை சுகாதாரப்பிரிவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.