துரைரெட்ணம் ஐயா கல்முனை வைத்தியசாலைக்குப் பெற்றுத்தந்த அரும் பெரும் சேவையினை அம்பாரை வாழ் தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள்

 

 

சா.நடனசபேசன்

கொவிட் தொற்றினால் உயிரிழந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணம் ஐயா கல்முனை வடக்கு வைத்தியசாலைக்குப் பெற்றுத்தந்த அரும் பெரும் சேவையினை அம்பாரை வாழ் தமிழ் மக்கள் என்றென்றும் மறக்கமுடியாதவர்களாக இருக்கின்றோம்.அத்தோடு அவர் குணமடையவேண்டும் எனப் பிரார்த்தித்தும் கை கூடவில்லை  என கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.சந்திரசேகரம் தெரிவித்தார்

மரணமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணம் ஐயா அவர்களுக்கு விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அம்பாரை வாழ் தமிழ் மக்கள் பல்வேறுவழிகளிலும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றோம் இந்த நிலையில் கல்முனை வடக்கு வைத்தியசாலை அதிதீவீர சிகிச்சைப்பிரிவு அமைப்பதற்காக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் வாய்ப்புக்கிடைத்தது. அப்போது அதற்கான இடவசதி பாரிய தட்டுப்பாடக இருந்தநிலையில் அதன் அருகில் இருந்த அரசகாணியைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டோம் அப்போது ஆளுநராக இருந்த ரோகித போகலாகம அவர்களால் அனுமதி வழங்கப்படாத நிலையில் நானும் என்னுடன் பலரும் சம்மந்தன் ஐயாவைச் சந்திக்கச் சென்றபோது அவரைச் சந்திக்க முடியாததால் க.துரைரெட்ணம் ஐயா அவர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கினோம் அவர் உடனடியாக அப்போதய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுடன் தொடர்புகொண்டு அதற்கான பூர்வாங்க வேலைகளை நிறைவுசெய்து எமது வைத்தியசாலைக்கு 2 ஏக்கர் காணியினைப் பெற்றுத்தந்தார். அத்தோடு அம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக உதவிசெய்த ஒருவர் இதனை எமது மக்கள் என்றும் மறக்கமுடியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தமட்டில் சம்மந்தன் ஐயாவின் வழிகாட்டலில் தமிழ் மக்களின் அரசியல் பயனத்திற்காக அயராது முயற்சிசெய்து வருகின்றது இந்தப் பயணத்தில் துரைரெட்ணம் ஐயா அவர்கள் பயணித்து பல அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டவர் இவரது இழப்பானது  அம்பாரை மாவட்டத்திற்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.  

Related posts