கிழக்கில் டெல்ராவால் பேராபத்து : மக்கள் அவதானம்! கடந்த 48மணிநேரத்தில் 974தொற்றுகள் 16மரணங்கள் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக்

கிழக்குமாகாணத்தில் வழமைக்குமாறாக கடந்த 48மணிநேரத்தில் 974தொற்றுகளும்  16மரணங்களும் ஏற்பட்டுள்ளன. டெல்டாவின் பிரசன்னமும் நிகழ்ந்துள்ளது. இது கிழக்கில் மற்றுமொரு பேராபத்து நெருங்குவதை கட்டியம்கூறிநிற்கிறது என்று  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
 
நேற்றுமுன்தினம்  507கொவிட் தொற்றுகளும்  09மரணங்களும் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினம் 467கொவிட் தொற்றுகளும்  07மரணங்களும் ஏற்பட்டுள்ளன.
 
நேற்றுமுன்தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 230தொற்றுக்களும், 2மரணங்களும் சம்பவித்துள்ளன.
 
அம்பாறை பிரிவில் 127தொற்றுக்களும் 1மரணமும் ,கல்முனை சுகாதாரப்பிராந்தியத்தில்  81தொற்றுக்களும் 6மரணங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 70தொற்றுக்களும், ஏற்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக தொற்றாளர்களாக 247 நபர்களும், கல்முனையில்  அம்பாறையில் 81 ,கல்முனையில் 72 ,திருகோணமலையில்  67 எனவும் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
 
கடந்தசில நாட்களாக நாட்டின் ஏனைய மாகாணங்களில் சடுதியாக ஏற்பட்டுள்ள சடுதியான நோயாளர் மற்றும் மரணங்களின் அதிகரிப்பு கிழக்கு மாகாணத்திலும் ஏற்பட்டுவருவதைக்காணக்கூடியதாயுள்ளது.
 
கடந்தவாரங்களில் கிழக்கில் 200-250நோயாளர்களும் 2-3 மரணங கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் தற்போது அத்தொகை மும்மடங்காக மாறிவருகிறது. இது கிழக்கு மாகாணத்திற்கு அபாய அறிவிப்பாக கருதமுடியும்.

397பேர் மரணம்!
கிழக்கில் இதுவரை 397கொவிட் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
மட்டக்களப்பு 02 கல்முனை 04 அம்பாறை 01 என ஏழுமரணங்களும் பதிவாகியுள்ளது.
மொத்தமாக மூன்றாம் அலையின் பின் 18231 கோவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளார்கள். 370 மரணங்களும் மொத்தமாக 397கோவிட் மரணங்கள் ஏற்பட்டுள்ளது.
திருகோணமலையில்    அதிக 151  மரணங்களும்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் 119பேரும் , கல்முனையில் 86  ,அம்பாறையில் 41 எனவும் மரணங்கள் சம்பவித்துள்ளன.
 
இதனை கருத்திற் கொண்டு ,மக்கள் அவதானத்துடன் சுகாதார வழி முறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கவும் ,சமூக இடைவெளிகளை பேணுதல் ,முகக்கவசம் அணிதல் ,கைகளை அடிக்கடி சவர்க்காரம் இட்டு கழுவுதல் போன்ற விடயங்களை அரசின் கட்டுப்பாடுகளுக்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்.

 தடுப்பூசியைப் பெற்றுவிட்டோம் என்ற நினைப்பில், சுகாதாரநடைமுறைகளில் ஒருவித தளர்வை கடைப்பிடிப்பதாகவே பார்க்கிறோம். எனவே தயவுசெய்து அனைவரும் தொடர்ச்சியாக சுகாதாரநடைமுறைகளை இறுக்கமாகக்கடைப்பிடிக்க வேண்டும்.என்றார்

Related posts