கிழக்கில் 50ஆயிரத்தை அண்மிக்கும் தொற்றுக்கள்:900ஆகும் மரணங்கள்!மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தௌபீக்

கிழக்குமாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தை அண்மித்துள்ளது. இதுவரை அங்கு 49,708பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.மரணங்கள் 900ஜ அண்மித்துள்ளது.இதுவரை 898பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர். என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
 
 இருந்தபோதிலும் அண்மைக்காலமாக மரணங்களின் எண்ணிக்கையும் தொற்றும் வீதமும் குறைவடைந்து வருகின்றன.எனினும் ஆபத்து நீங்கவில்லை.மக்கள் தொடர்ந்து அவதானமாக இருக்கவேண்டும் என்றார்.
 
அவர் மேலும் கூறுகையில்:
இதுவரை திருமலை மாவட்டத்தில் அதிகூடிய  320பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 305 பேரும், கல்முனையில் 160பேரும், அம்பாறையில் 113பேரும் மரணித்துள்ளனர்.
 
வழமைக்குமாறாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில்  தொற்றுகளும்  மரணங்களும் நான்கு மடங்காக அதிகரித்துக்காணப்பட்டன. ஆனால் கடந்த ஒருசில நாட்களாக தொற்றுக்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துவருவதை அவதானிக்கக்கூடியதாயுள்ளது.
 
50ஆயிரத்தை தொடும் தொற்றுக்கள்
கிழக்கில் தொற்றுக்களின் இன்னும் ஒருசிலநாட்களில் 50ஆயிரத்தை தொடலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று(19)வரை 49708 தொற்றுக்களும் 898மரணங்களும் நிகழ்ந்துள்ளன. தற்போது வழங்கப்படும் தடுப்பூசியின் பின்னர் இத்தொகை குறையலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
 
கிழக்கில் அதிஆபத்துநிறைந்த பகுதிகளாக தெஹியத்தகண்டிய உஹன  அம்பாறை தமன மகாஓயா காரைதீவு ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 161பேர்  புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.01மரணம்சம்பவித்திருக்கின்றது.
தடுப்பூசிகள்!
கிழக்கில் இதுவரை 17லட்சத்து 3ஆயிரத்து 500 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றன. அவற்றில் 14லட்சத்து 74ஆயிரத்து 80 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
 
.தடுப்பூசியைப் பெற்றுவிட்டோம் என்ற நினைப்பில் சுகாதாரநடைமுறைகளில் ஒருவித தளர்வை கடைப்பிடிப்பதாகவே பார்க்கிறோம். எனவே தயவுசெய்து அனைவரும் தொடர்ச்சியாக சுகாதாரநடைமுறைகளை இறுக்கமாகக்கடைப்பிடிக்க வேண்டும்.
 
இதனை கருத்திற் கொண்டு மக்கள் அவதானத்துடன் சுகாதார வழி முறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கவும் ,சமூக இடைவெளிகளை பேணுதல் ,முகக்கவசம் அணிதல் ,கைகளை அடிக்கடி சவர்க்காரம் இட்டு கழுவுதல் போன்ற விடயங்களை அரசின் கட்டுப்பாடுகளுக்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்என்றார்.

Related posts