துறைநீலாவணை மகாவித்தியாலம் (தேசிய பாடசாலை) 97 வீதமான மாணவர்கள் சித்தி -; மாதேஸ் 9 ஏ சித்தி பெற்று சாதனை

சா.நடனசபேசன்

வெளியான சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்புக் கல்வி வலயத்தின் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) வலயத்தில் 97 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன்  தேவகுமார் மாதேஸ் 9 ஏ சித்தி பெற்று வலயத்தில் அதிசிறந்த பெறுபேறு என்ற சாதனையினைப் பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமையினை  நிலைநாட்டியுள்ளதாக அதிபர் ரீ.ஈஸ்வரன் மற்றும் பிரதி அதிபர் எஸ்.செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.

இப் பரீட்சைக்கு 85 மாணவர்கள் தோற்றி 79 மாணவர்கள் கணிதம் தமிழ் உட்பட உயர்தரம் கற்பதற்கு தகுதிபெற்றுள்ளதுடன் இதில் கி.ராகுலன் 8 ஏ, சி, எஸ்.தனுஸ் 8 ஏ, வி கி.,பிரகதீஸ் 8 ஏ, வி மற்றும் த.யனுகேஷ் 7 ஏ,சி வே.டிலோமிதன் 7 ஏ, வி, ,ர.துசாரிக்கா 7 ஏ, சி, வி.ராதிகா 7 ஏ ,சி வா.,புவஜன் 7 ஏ, வி. கு.ஹேமலதன் 6 ஏ,வி,சி சித்திகளைப் பெற்று பெருமை சேர்த்துள்ளதுடன்  இதில் சில  மாணவர்களின் அழகியல் பாடம் வெளியிடப்படாத நிலையில் இப் பெறுபேற்றினைப் பெற்றுள்ளனர்.

அதே வேளை இப்பாடசாலையின் அதிபர் ரி.ஈஸ்வரன் பிரதி அதிபர் எஸ்.செல்வம் மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் பொது அமைப்புக்கள் பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துள்ளனர்.

 

Related posts