மக்களை நேசிக்கும் தலைமைகளால் மாத்திரமே அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசம் தொடக்கம் வாழைச்சேனை வரையிலும் வாழைச்சேனை தொடக்கம் மண்முனைப்பற்று பிரதேசம் வரையிலுமாக சுமார் 4700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 89 கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி பணிகளை மீண்டும் ஆரம்மிப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உரியநடவடிக்கை மேற்கொண்டுள்ளார்
 
 ம ட்ட க்களப்பு மாவட்டத்தில்   BT 1,BT 2  திட்டத்திம் மூலம்    இரண்டு தொகுதிகளாகப்பிரிக்கப்பட்டு உலக வங்கியின் நிதி வளங்கலின்கீழ் சுமார் 138 கிலோ மீற்றர் வீதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோதும்  
 
 நல்லாட்சி அரசும் அதற்கு முட்டுக் கொடுத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களின் கையாலாத்தனம் காரணமாக அந்த வேலைத்திட்டங்கள் அவ்வாறே நிறுத்தப்பட்டிருந்தது  மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்திக்காக  பல்வேறு நிதி ஒதுக்கப்படும் கடந்த காலங்களில் கையாலாகாத அரசியல் தலைமைகளின் நிர்வாக திறமையின்மை காரணமாக  திருப்பி அனுப்பப்பட்டது
 
 ஒருபுறமிருக்க நாளாந்தம் பல வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென மக்களால்  கோரிக்கை விடுக்கப்படும் நிலையில்  கடந்தகாலத்தில்  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆட்சி இணக்க ஆட்சி நடத்திய மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படிருந்தது ஆனால் ஆட்சி மாற்றம் என்கின்ற பெயரில் நல்லாட்சி அரசு அதற்கு முட்டுக் கொடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி  ஆட்சிக்காலத்தில் குறித்த பல அபிவிருத்தி பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு திருப்பப்பட்டது மக்கள் அறிந்த விடயம் அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஐ  திட்டத்தினூடாக வீதி அபிவிருத்தி பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்க்படாமல் கிடப்பில்  கிடந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் பிரதம மந்திரியின் கவனத்திற்கு விடயத்தினை கொண்டு சென்று குறித்த வீதி அபிவிருத்திப் பணிகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்
 வீதி அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் தலைமையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது   சுமார் 89 கிலோ மீட்டர் வீதிகளையும் 5 தொகுதிகளாகப் பிரித்து உடனடியாக வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் செயலாளரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது
 
குறித்த கலந்துரையாடலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட குழுவினரும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சார்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டு இருந்தனர்

Related posts