சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவித்திட்டம் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் வறிய நிலையிலுள்ள குடும்பங்களுக்கு இன்று 26.02.2022  வாழ்வாதார உதவிகள்  வழங்கிவைக்கும் நிகழ்வு தலைவரும் முன்னாள் பிரதி கல்விப்பணிப்பாளருமான மு.விமலநாதன் தலைமையில்  இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் வறிய குடும்பங்களின் கல்வி வளர்ச்சி மற்றும் வாழ்வாதார முன்னேற்றம்ஆகியவற்றினை நோக்காக கொண்டு செயற்படும் சுவிஸ் உதயம் அமைப்பினால் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

இதன்கீழ் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவுஇமுதலாம் குறுக்கு வீதியில் உள்ள மிகவும் வறிய நிலையில் உள்ள ஆறு குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் உப பொருளாளர் பேரின்பராஜாவின் மகன் பேரின்பராஜா அபிஷேக் (02-02-2022) மற்றும் அவரது மனைவி பேரின்பராஜா பானுவின் ( 24-02-2022) 50 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் கிழக்கு மாகாண கிளையின் செயலாளர் திருமதி றொமிலா செங்கமலன் ஏற்பாட்டில் சங்கத்தின் தலைவரும் முன்னாள் பிரதி கல்விப்பணிப்பாளருமான மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன்இபிரதித்தலைவர் ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன்,சங்க உறுப்பினர் க.யுதர்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

Related posts