எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி , தற்போது 137 ரூபாவாக காணப்படும் பெற்றோல் லீற்றரின் புதிய விலை 145 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி , அதன் புதிய விலை 155 ரூபாவாகும்.
டீசல் லீற்றரின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதன் புதிய விலை 118 ரூபாவாகும்.
சூப்பர் டீசல் லீற்றரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில , சூப்பர் டீசல் லீற்றரின் புதிய விலை 129 ரூபா என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.