பெரியகல்லாற்றில் திருடியவர்கள் கைது

கடந்த 29ந் திகதி களுவாஞ்சிக்குடி பெரியகல்லாற்றை உலுக்கிய திகில் மிக்க கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரை தாங்கள் கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்கடி குற்றப்பலனாய்வு பொறுப்பதிகாரி ஜெயசீலன் தெரிவித்தார். அத்துடன் கொள்ளையிடப்பட்ட நகைகைளின் ஒரு பகுதியை (20பவுண்) உருக்கி தங்கக் கட்டியாக்கிய நிலையில் கைப்பற்றியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக முக்கிய கொள்ளைச் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவம் அவர் மேலும் தெரிவித்தார். அவர்கள் அனைவரையம் விரைவில் கைது செய்துவிடுவோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியே சந்தேக நபர்களை பொலிசார் இனம்கண்டு கைது செய்துள்ளனர். அத்துடன் தங்க நகைகளை கொள்வனவு செய்த மட்டக்களப்பில் உள்ள நகைக்டையொன்றின் காசாளரையும் கைது செய்துள்ளனர். இவர்களை நேற்று புதன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியள்ளனர்.

கொள்ளை இடப்பட்ட வீட்டின் உரிமையாளரான சோதிநானிடம் கொள்ளை பற்றி வினவியபோது. புதன்வருமாறு தெரிவித்தார். கொள்ளையர்களின் தாக்கத்திற்குள்ளான அவர் உடல் பாதிப்பில் இருந்து இன்னும் விடுபடாத நிலையிலேயே தனது திகில் நிறைந்த அனுபவத்தை வெளியிட்டார்.

எனக்கு அன்று இரவு 8.15 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 5இலட்சம் கப்பம் கோரும் அழைப்பாகவே அது இருந்தது. அதனால் நான் நித்திரை குழம்பிய நிலையிலேயே இருந்தேன். சுமார் 2.15 மணி இருக்கும.; கதவை உடைத்துக் கொண்டு கொள்ளையர்கள் உட்புகுந்தனர். நானும் மனைவியும் அச்சமடைந்திருந்தவேளையில் எங்களிருவரையும் கட்டிப்போட்டு நகை ரொக்கம் என்பனவற்றை தருமாறும் இல்லையேல் கொலை செய்வதாகவும் அச்சுறுத்தினர்.

மனைவி அணிந்திருந்த நகைகளை கழட்ட மறுத்தபோது அவரையும் என்னையும் பலமாகத் தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையிட்டனர். (அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்கைசக்காக அனுமதிக்க வேண்டிய நிலையும் எற்பட்டது.)

அன்று திருமண வீடு ஒன்றுக்கு சென்று தாமதமாக வந்ததாதால் நகைகளை நேரம் குறித்த இரும்பு பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்க முடியாமல் போய்விட்டது. இது கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. அத்துடன் ஒரு தேவைவைக்காக எடுத்து வைத்திருந்த பல இலட்சம் ரூபாவையும் கொள்ளையிட்டனர். அத்துடன் நேரம் குறித்த இரும்பு பெட்டகத்தில் இருந்த நகை மற்றும் ரொக்கங்களை அவர்களால் கொள்ளையிட முடியாமல் போய்விட்டது.

இவர்கள் மூன்று நாட்களாக இரவில் எனது வீட்டைச்சுற்றியள்ள நாய்களுக்கு சாப்பாடு வைத்து வந்துள்ளதை பின்னர்தான் அறிய முடிந்தது. சம்பவதினத்தன்று நஞ்சு கலந்த சோற்றை வைத்துள்ளனர். அதனால் 25 நாய்கள் உயிரிழந்துள்ளன. அத்துடன் இரவில் பாதுகாப்பிற்காக திறந்துவிடும் பழக்கமில்லாதவர்களை கண்டால் (என்னையும் மனைவியையம் தவிர) தாக்கும் பன்றி இரண்டும் உயிரிழந்துள்ளன.

இவர்கள் ஆளரவமும் பொலிசார் வருகையும் கை தொலைபேசி மூலம் அறிந்து திடீரென தப்பிச் சென்றுள்ளனர்.

பொலிசாரின் தகவலின்படி கொள்ளையர்கள் கடற்கரையால் நடந்துவந்து மயானத்தில் உடைமாற்றி ஹெல்மெற் அணிந்து வீடுநோக்கி வந்துள்ளதாக கண்டுபிடித்தள்ளனர்.

களுவாஞ்சிக்குடி பொலிசார் 10 நாட்களுக்குள் கொள்ளையர்களை பிடித்துவிடுவோம் என்று என்னிடம் உறுதியளித்தனர். அதற்கு முன்னரே அவர்கள் துல்லியமான நுணுக்கமான நவீன தொழில் நுட்பங்களையும் சிறந்த புலனாய்வு அணுகு முறைகளையும் பயன்படுத்தி; வெற்றி கண்டுள்ளமையானது பாராட்டுக்கரியது என்று சோதிநாதன் தெரிவித்ததுடன் அவர்களின் துரித நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts