கிழக்கு மாகாண தொண்டராசிரியர்களுக்கான நியமனம் மிகவிரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகல்லாகம தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண தொண்டராசியர் தெரிவின்போது தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறும் பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் கிழக்கு மாகாணசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஆளுனரின் மக்கள் சந்திப்பின்போது இக்கோரிக்கையினை முன்வைத்த போது ஆளுனர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
தொண்டராசியர்களின் அனைத்து மேன்முறையீடுகளும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடையும் தெரிவுசெய்யப்பட்ட தொண்டராசிரியர்களின் பெயர்விபரங்கள் வெளியிடப்படும் என தெரிவித்ததுடன், யுத்தகாலத்தில் ஆசிரியர்கள் இல்லாத பாடசாலைகளில் எவ்வித கொடுப்பனவுகளுமின்றி சேவையாற்றிய தொண்டராசிரியர்களை பாராட்டி நன்றியினையும் தெரிவித்திருந்தா