இலங்கை பொறியியல் துறையில் பிரவேசித்த தலைசிறந்த பொறியியலாளர்கள் யாழ்.மாவட்டத்தில் இருந்தே உருவாகியதாக பிரதமர் ரணல் விக்ரமசங்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்;பட்ட பொறியியல் பீட மற்றும் மாணவர்கள் விடுதி ஆகிய கட்டடத்தொகுதிகள் (சனிக்கிழமை) திறந்;து வைக்கப்பட்டன.
இவற்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், இலங்கை பொறியியல் துறையில் பிரவேசித்த தலை சிறந்த பொறியியலாளர்கள் யாழ்.மாவட்டத்தில் இருந்தே உருவாகினர். யாழ்.ஹாட்லி கல்லூரியே அதிகளவான பொறியலாளர்களை பிரசவித்தது.
ஆனால் அவற்றை 30 வருட யுத்தம் இல்லாமல் செய்துள்ளது. அன்று கிடைத்த பெறுபேறுகளை போன்று இன்று கிளிநொச்சி வளாகத்தின், பொறியியல் பீடமும், தொழிநுட்பபீடமும் செயற்படும் என்பது எனது நம்பிக்கை.
வடக்கை அபிவிருத்தியடைய செய்வதன் ஒரு அங்கமாகவே கல்வியை துறை காணப்படுகின்றது. யுத்தம் வடக்கையும், தெற்கையும் பாதித்துள்ளது.
அதன் மூலமாக நாம் பின்னடைவை சந்தித்துள்ளோம். வியட்நாம் யுத்தத்திற்கு பின்னரே அபிவிருத்தியடைந்தது. அதேபோல் நாம் யுத்தம் நிறைவடைந்தன் பின்னரான இடைகாலத்தில் இருக்கின்றோம்.
வடக்கில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. குறிப்பாக மனிதாபிமான பிரச்சினைகளை நாம் முதலில் தீர்த்து வைக்க வேண்டும். தற்போது படையினரிடம் உள்ள காணிகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன.
எமது அரசின் முதற்பகுதியில் வடக்கின் புனர்வாழ்வு தொடர்பிலும், நல்லிணக்கம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
பலாலியில் சர்வதேச தரத்திலான விமான நிலையம் ஒன்றை அமைத்தால் அதற்கு மலேசியாவில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் மக்கள் வருகைதருவாரரர்;;கள் என்பது எனது எண்ணம். காங்கேசன்துறை துறைமுகம் தற்போது விரிவுபடுத்தப்படவுள்ளது’ என தெரிவித்துள்ளார்.