நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ரணில் விக்ரமசிங்கவின் காலத்திலும், அவருக்கு அமைச்சுப் பதவி கேட்டு பல இடங்களில் திரிந்தவர் என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டுமை தொடர்பில் இன்று அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் எமது கட்சியின் தலைமைப் பீடத்திற்கும் அறிவித்திருந்தோம், அதிலும் நாம் எச்சரிக்கையாகவும் இருந்தோம்ஆனால் அவர் திடீரென கனடா நாட்டிற்குச் சென்றுவிட்டார். பின்னர் அவர் மீண்டும் இலங்கை வந்ததும் விமான நிலையத்திலிருந்தே நேரடியாக அரசு பக்கம் சென்றுவிட்டார்
இதுவரைகாலம், அவர் தமிழ் மக்களின் மீது கரிசனை கொண்டது போல், செயற்பட்டது, நடித்தது, அவருடைய போலியான முகாமாகும். அவர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் கல்விப் பொறுப்பாளராக செயற்பட்டவர்தற்போது வாக்களித்த மக்களையெல்லாம் ஏமாற்றிவிட்டு என்னென்னவெல்லாம் பெற முடியுமோ அவற்றையெல்லாம் பெற்றுவிட்டு சுக போக வாழ்க்கைக்காக போயிருக்கின்றார்மாவட்டத்தில் சில அரச அதிகாரிகள் இவ்வாறான அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்திருக்கின்றார்கள். ஏனெனில் அவர்களின் பதவி உயர்வு, போன்றவற்றிக்கு உதவும் என நினைக்கின்றார்கள்.
வியாழேந்திரன் புளொட் கட்சி சார்ந்தவராக இருந்தலும், எங்களது தமிழரசுக் கட்சியில் தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்
அவருடைய புளொட் கட்சி இவரை கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாக தற்போது அறிவித்திருக்கின்றதுஅதற்கிணங்க எமது தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் எமது கட்சியிலிருந்து நீக்குவதாக தேர்தல் ஆணையாளருக்கு கடிதத்தை அனுப்பி வைப்பார் என குறிப்பிட்டுள்ளார்