விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 4,035 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 4,035 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ​பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 1,122 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தோரில் 885 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, போக்குவரத்து விதிகளை மீறினர் என்றக்குற்றச்சாட்டின் கீழ் இதுவரையிலும் 5,550 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பொலிஸ் ஊடக பேச்சாளர் திணைக்களம், இந்த நடவடிக்கைகள் யாவும், பொலிஸ் அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புக்கமைய முன்னெடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

Related posts